சீன அதிபரைச் சந்தித்த
பாகிஸ்தான் தளபதி

சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீா் செவ்வாய்க்கிழமை முதன்முறையாக சந்தித்தாா்.
Published on

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீா் செவ்வாய்க்கிழமை முதன்முறையாக சந்தித்தாா். பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இணைந்து இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து ஜின்பிங்குடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தியதாக அதிகாரிகள் கூறினா்.

தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான குழுவில் முனீரும் இடம்பெற்றிருந்தாா்.

புதன்கிழமை (செப். 3) நடைபெறவுள்ள சீன ராணுவத்தின் 80-வது ஆண்டு விழா அணிவகுப்பில் முனீரும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com