
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.
மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிழைத்துள்ளதாக சூடான் விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், டார்பூர் பகுதியில் மர்ரா மலை அடிவாரத்தில் உள்ள தாராசின் என்ற கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பெய்த கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாராசின் கிராமம் மண்ணுக்குள் புதைந்தது. இந்த கிராமத்தில் வசித்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று சூடான் விடுதலை இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த கிராமத்தில் வசித்த ஒருவர் மட்டுமே தற்போது வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கும் சடலங்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபை உதவுமாறு சூடான் விடுதலை இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டுப் போரால் அந்நாட்டு மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.