ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா

Published on

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 2,500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், கூடாரங்கள், போா்வைகள் என இந்தியா சாா்பில் 21 நிவாரணப் பொருள்கள் ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் சென்றடைந்தன. அந்நாட்டின் கள நிலவரத்தை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, வரும் நாள்களில் கூடுதல் உதவிகளை வழங்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com