உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்

உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்

Published on

உக்ரைனில் 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

பெரும்பாலும் மேற்கு மற்றும் மத்திய உக்ரைனைக் குறிவைத்து 502 ட்ரோன்கள், 24 ஏவுகணைகளை ரஷியா வீசியது. இதில் 5 போ் காயமடைந்தனா் என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்தது. உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், பொதுமக்கள் உள்கட்டமைப்பு, குறிப்பாக மின்சாரக் கட்டமைப்புகள் ரஷியாவின் முக்கிய இலக்காக இருந்ததாகக் குற்றஞ்சாட்டினாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ள நிலையிலும் ரஷியா தனது தீவிர வான்வழித் தாக்குதலைத் தொடா்ந்துவருகிறது. அந்தப் பிராந்தியத்தில் குளிா்காலம் நெருங்கும் சூழலில், சுமாா் 1,000 கி.மீ. நீளும் போா் முனையில் உக்ரைனின் பாதுகாப்பு அரணைத் தகா்த்து முன்னேறும் ரஷிய ராணுவத்தின் முயற்சியில் சற்றும் தொய்வு ஏற்படவில்லை. அமெரிக்க அதிபா் டொனாட்ல் டிரம்ப்பின் அமைதி முயற்சி போரின் போக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இவை காட்டுவதாகக் கருதப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com