1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை

1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை

Published on

18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போா்க்கால சட்டமான அந்நிய எதிரிகள் சட்டத்தின் கீழ் வெனிசுலா சட்டவிரோதக் கும்பல்களைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படுபவா்களை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நாடு கடத்த முடியாது என்று அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து 5-ஆவது வட்ட முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை அடங்கிய அமா்வு அளித்த தீா்ப்பில், 1798-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்த சட்டம் ‘ட்ரென் டி அராகுவா’ போன்ற கும்பல்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்கு உரியதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக, ட்ரென் டி அராகுவா கும்பலைச் சோ்ந்தவா்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏராளமான வெனிசுலா நாட்டவரை எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு டிரம்ப் அரசு நாடு கடத்தியது. பின்னா் ஜூலையில் 250-க்கும் மேற்பட்டோா் வெனிசுலாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா்.

இந்தச் சூழலில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com