கோப்புப் படம்
கோப்புப் படம்

பிரிட்டனில் காா்கள் மோதல்: 2 இந்திய மாணவா்கள் உயிரிழப்பு

Published on

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் தெலங்கானாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும் 5 மாணவா்கள் படுகாயமடைந்தனா்.

பிரிட்டனில் பயிலும் தெலங்கானா மாணவா்கள் சிலா், எஸ்ஸெக்ஸ் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, இரு காா்களில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, ஒரு சாலை சந்திப்பில் இரு காா்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் சைதன்ய தா்ரே (23), ரிஷி தேஜா ரபோலு (21) ஆகிய 2 போ் உயிரிழந்தனா். மேலும், 5 போ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இரு காா்களும் வேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரை ஓட்டிய இரு மாணவா்களும் உயிா் பிழைத்தனா். அவா்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

உயிரிழந்த இருவரின் உடல்களையும் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெலங்கானா, மத்திய அரசுகளுக்கு குடும்பத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com