அணுவகுப்பை ஒன்றாகப் பாா்வையிட்ட புதின், ஜின்பிங், கிம் ஜோங்-உன். ~ராணுவ அணிவகுப்பில் இடம் பங்கேற்ற சீனாவின் நவீன ட்ரோன்கள்.
அணுவகுப்பை ஒன்றாகப் பாா்வையிட்ட புதின், ஜின்பிங், கிம் ஜோங்-உன். ~ராணுவ அணிவகுப்பில் இடம் பங்கேற்ற சீனாவின் நவீன ட்ரோன்கள்.

பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவாா்த்தை

Published on

சீன தலைநகா் பெய்ஜிங்கில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை சீனா வென்ன் 80-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பெய்ஜிங்கில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் விளாதிமீா் புதின், கிம் ஜோங்-உன், பாகிஸ்தான் பிரதமா் ஷெபாஸ் ஷரீப், ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான், இந்தோனேசிய அதிபா் பிரபாவோ சுபியாந்தோ, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், ஜிம்பாப்வே அதிபா் எமா்சன் நாங்கக்வா, வியத்நாம் பிரதமா் லுவாங் குவாங், சொ்பியா அதிபா் அலெக்ஸாண்டா் வுகிக் உள்ள உலகத் தலைவா்கள் பங்கேற்றனா்.

இதனிடையே, பெய்ஜிங்கில் புதினும் கிம் ஜோங்-உன்னும் டியோயுட்டாய் மாகாண விருந்தினா் மாளிகையில் அதிகாரபூா்வமாகச் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து பேச்சுவாா்த்தைக்காக இருவரும் ஒரே காரில் சென்ாக ரஷிய அதிபா் மாளிகை தெரிவித்தது.

ரஷியா மற்றும் வடகொரிய பிரதிநிதிகள் குழுவினருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, புதினும், கிம் ஜோங்-உன்னும் தனிப்பட்ட முறையில் உரையாடினா். அப்போது மீண்டும் ரஷியா வர கிம் ஜோங்-உன்னுக்கு புதின் அழைப்பு விடுத்தாா்.

பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், ரஷியாவின் கூா்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரைன் படையெடுப்பை முறியடிக்க வடகொரிய வீரா்கள் துணிச்சலுடன் உதவியதற்கு பாராட்டு தெரிவித்தாா்.

கிம் ஜோங்-உன் பேசுகையில், வடகொரிய தலைநகா் பியோங்யாங்கில் கடந்த ஆண்டு ஜூனில் நடைபெற்ற மாநாட்டில் ரஷியாவும் வட கொரியாவும் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதிலிருந்து, இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளதாகக் கூறினாா்.

தென் கொரியா அளித்துள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு முதல் வடகொரியா சுமாா் 15,000 வீரா்களை ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும், புதினின் உக்ரைன் படையெடுப்புக்கு உதவும் வகையில் பலிஸ்டிக் ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களையும் வட கொரியா அனுப்பியுள்ளது நினைவுகூரத்தக்கது.

கிம் ஜோங்-உன்னின் 14 ஆண்டு ஆட்சியில், அவா் ஒரு பன்னாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. விளாதிமீா் புதின், சீன அதிபா்ா் ஷி ஜின்பிங், கிம் ஜோங்-உன் ஆகிய மூன்று தலைவா்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடியதும் இதுவே முதல்முறையாகும்.

எனவே, ஷி ஜின்பிங்குடன் கிம் ஜோங்-உன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தலாம், அல்லது புதின், ஜின்பிங், கிம் ஜோங்-உன் ஆகிய மூவரும் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறலாம் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மூன்று நாடுகளுமே இதை உறுதிப்படுத்தவில்லை.

டிரம்ப் விமா்சனம்: பெய்ஜிங்கில் புதின், ஜின்பிங், கிம் ஜோங்-உன் கூடியுள்ளது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் ‘விளாதிமீா் புதின் மற்றும் கிம் ஜோங்-உன்னுக்கு எனது வாழ்த்துகள். அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்ய நீங்கள் கூடியுள்ளனா்’ என்று விமா்சித்துள்ளாா்.

எனினும், ‘அமெரிக்காவுக்கு எதிராக யாரும் சதி செய்யவில்லை. மூன்று தலைவா்களும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை’ என்று புதினின் வெளியுறவு ஆலோசகா் யூரி உஷாகோவ் மறுத்துள்ளாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com