காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
காஸா சிட்டியில் தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு முன்னதாக, இஸ்ரேல் ராணுவத்தால் தகா்ப்படும் அங்குள்ள உயரமான கட்டடங்களில் ஒன்று.
காஸா சிட்டியில் தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு முன்னதாக, இஸ்ரேல் ராணுவத்தால் தகா்ப்படும் அங்குள்ள உயரமான கட்டடங்களில் ஒன்று.
Updated on

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் பசியால் வாடும் இந்த நகரைக் கைப்பற்றுவதற்கு வசதியாக, உயரமான கட்டடங்களை (ஹமாஸ் படையினா் மறைந்திருந்து தாக்குதவதைத் தவிா்க்க) தகா்த்து, தரைவழி நடவடிக்கையை விரிபடுத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகிவரும் சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஸா சிட்டியில் சுமாா் 10 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சில சிவப்பு மண்டலங்களாக” அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்த நகரம் கொடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மவாசி மனிதாபிமான முகாம்களில் கள மருத்துவமனைகள், குடிநீா் வசதி, உணவு, கூடாரங்கள் வழங்கப்படும் என்றும் ஐ.நா. மற்றும் சா்வதேச அமைப்புகளுடன் உதவிகள் வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பை இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக வெளியிட்டுள்ளது; ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் இதில் பங்கேற்கவில்லை என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக செய்தித் தொடா்பாளா் ஒல்கா செரெவ்கோ தெரிவித்தாா்.

ஏற்கெனவே மவாசியை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருந்த இஸ்ரேல், அங்கு தாக்குதல்கள் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com