
காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், 15 மாடிகள்கொண்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் படையினர் பயன்படுத்தியதாகக் கூறி, கட்டடத்தைத் தரைமட்டமாக்கிய நேரத்தில், அப்பகுதியில் இருந்தோர் அங்குமிங்கும் சிதறியோடிய காட்சிகளும் வெளியாகின.
அதுமட்டுமின்றி, காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வரும்நிலையில், இஸ்ரேலின் தற்போதைய அறிவிப்பானது காஸா நகரை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்தின் ஒருபகுதியாகக் கொள்ளப்படுகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் 64,368 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலும் பொதுமக்களே என்பதுதான் பெருந்துயர்.
இதனிடையே, ஹமாஸுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.