
காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இவ்விரு நாடுகளின் சாகர்மாதா நட்புறவுக் கொள்கையின்கீழ், ஐந்தாம் ஆண்டாக இந்த ராணுவப் பயிற்சி இன்று(செப். 7) தொடங்கியது.
அதில் நேபாள ராணுவம் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் இணைந்து கூட்டாக ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன.
10 நாள்கள் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில் பேரிடர் மேலாண்மை, ஐ.நா. அமைதித் திட்டப் பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை குறித்து தகவல் பரிமாற்றமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.