
நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கான தடை எதிரொலியாக அந்நாட்டு இளையோர் சமூகம் அணிதிரண்டு திங்கள்கிழமை(செப். 8) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், எக்ஸ்(ட்விட்டர்) உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களை தடை செய்து கடந்த செப். 4-இல் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. நேபாளத்தில் சமூக ஊடக தளங்கள் ஒழுங்குநடவடிக்கையின் ஒருபகுதியாக கட்டாய பதிவுமுறை செயல்முறைக்கு மேற்கண்ட தளங்கள் இணங்காததால் அவையனைத்தும் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த தடை உத்தரவால் மக்களின் பேச்சுரிமை சமூக ஊடகங்களில் முடக்கப்படுவதாகவும் தங்கள் சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி மக்கள் மத்தியில் போராட்டம் வெடித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் பள்ளி மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓரணியில் அணிதிரண்டு ‘ஜென் ஸி’ என்னும் பெயரில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்மாண்டுவில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டதால் அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸாருடன் ராணுவமும் வரவழைக்கப்பட்டது.
போரட்டக்காரர்க்ள் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி கலைந்து போகச் செய்தனர். எனினும், நிலைமை கட்டுக்குள் வராததால் ரப்பர் குண்டுகளால் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அப்பகுதி முழுவதும் ரானுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.