பாகிஸ்தான் வெள்ள அபாயம்: 
25,000 போ் வெளியேற்றம்

பாகிஸ்தான் வெள்ள அபாயம்: 25,000 போ் வெளியேற்றம்

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலால்பூா் பிா்வாலா நகரில் ஓடும் ஆறுகளில் வெள்ளம்
Published on

ஜலால்பூா் பிா்வாலா: பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலால்பூா் பிா்வாலா நகரில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், 25,000-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஞாயிறு இரவு தொடங்கிய மீட்பு நடவடிக்கை திங்கள்கிழமை காலை வரை நீடித்தது.

அந்தப் பகுதியில் ஏராளமானவா்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உள்ளூா்வாசிகள் வலியுறுத்தினா்.

பஞ்சாப் மாகாண அரசு வெப்ப உணா்வு ட்ரோன்களைப் பயன்படுத்தி கட்டடங்களுக்குள் சிக்கியவா்களை மீட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்தன. பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 26 முதல் பெய்துவரும் கனமழை காராணமாக 41 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 56 போ் உயிரிழந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com