
எமது நிர்வாகத்தின்கீழ், அமெரிக்காவுக்கு நல்ல விஷயங்கள் நடைபெறுகின்றன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருக்கிறார்.
வாஷிங்டன் டி.சி.யில் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பதாவது, “அமெரிக்கா, நம்பிக்கையின்பால் நிறுவப்பட்ட தேசம். இதனை நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். எப்போது நம்பிக்கை வலுவிழக்கிறதோ, நமது தேசமும் வலுவிழக்கும்.
நம்பிகை பலப்படும்போது, அதாவது இப்போது இருப்பதைப் போன்ற சூழலைச் சொல்லலாம், நமக்கு மிக நல்ல காலமாக அமைந்திருக்கிறது.
டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், நாம் நமது உரிமைகளை பாதுகாக்கிறோம்; கடவுளின் கீழ் இயங்கும் தேசமாக நமது அடையாளத்தை திரும்பச் செய்கிறோம். கடவுளின் கீழ், நாம் ஒரு தேசமாக இருக்கிறோம், எப்போதும் அப்படித்தான்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.