
ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலேமில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் ஓடும் பேருந்தில் ஏறிய இரண்டு பயங்கரவாதிகள், பயணிகள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளையும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஹமாஸ் படையினர் உடனடியாக சரணடைய வேண்டும், இல்லையெனில் அழிக்கப்படுவீர்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.