
கத்தாரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 9) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
எதற்காக இந்தத் தாக்குதல்?
ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்தே கத்தாரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும், இந்தத் தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 பாலஸ்தீனா்கள் திங்கள்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். இந்த நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.