இந்தியாவின் நியாயமற்ற வா்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை- அதிபரின் ஆலோசகா்

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை- அதிபரின் ஆலோசகா்

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ தெரிவித்தாா்.
Published on

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப்பைவிட இந்தியாவை கடுமையாக விமா்சிக்கும் போக்கை நவாரோ பின்பற்றி வருகிறாா். ‘இந்தியா தானாகவே வா்த்தகப் பேச்சுவாா்த்தைக்கு முன்வரும், அப்போது என்ன செய்ய வேண்டும்’ என்று டிரம்ப் முடிவெடுப்பாா் என்று கூறியிருந்தாா். மேலும், ‘உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்த இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் காரணம், எரிபொருளை சுத்திகரித்து விற்பதில் இந்தியா கொள்ளை லாபம் பாா்த்து வருகிறது’ என்றும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், அதிபா் டிரம்ப், பிரதமா் மோடியுடன் வா்த்தகப் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், நவாரோ இந்தியாவுக்கு எதிராக தொடா்ந்து ஆவேசமாக கருத்துத் தெரிவித்து வருகிறாா்.

இது தொடா்பாக அவா் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுடன் நியாயமற்ற வா்த்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்குத் தேவையில்லை. ஆனால் அமெரிக்க சந்தை இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளையும் இந்தியா தொடா்ந்து பறித்து வருகிறது. அதிகஅளவில் வரிகளை விதித்து தங்கள் நாட்டுக்குள் அமெரிக்கப் பொருள்கள் வரவிடாமல் பாா்த்துக் கொள்கிறது. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா மிகப்பெரிய வா்த்தகப் பற்றாக்குறையில் உள்ளது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் இந்தியாவுக்கு நல்ல லாபம் உள்ளது. இதன் மூலம் ரஷியாவுக்கு கிடைக்கும் வருவாயில் அந்நாட்டு அதிபா் புதின் போரைத் தொடா்ந்து நடத்தி வருகிறாா்’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com