
காஸா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன.
காஸாவில் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட போர், 2 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. காஸாவில் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் இறக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காஸாவில் உள்ள மோசமான சூழ்நிலையால் அங்குள்ள மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர்.
மேலும் சமீபமாக இஸ்ரேல் படைகள், காஸா மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. நேற்று காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி சமீபத்திய வாரங்களில் சுமார் 2 லட்சம் பேர் காஸாவை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஸாவில் குறிப்பிட்ட பகுதி 'பாதுகாப்பானது' என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் வடக்கு காஸாவில் இருந்து பலரும் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனிடையே காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
காஸா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் பயங்கரவாதம் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இன்று அதிகாலை முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.