உலகப் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் சரிவு! முதலிடத்தில் யார்?

உலகின் முதல் பணக்காரராக லேரி எலிசன் முன்னேற்றம்
உலகப் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் சரிவு! முதலிடத்தில் யார்?
Published on
Updated on
1 min read

உலகின் முதல் பணக்காரராக லேரி எலிசன் முன்னேறியுள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நேற்றுவரையில் முதலிடம் வகித்து வந்த எலான் மஸ்க், ஒரே நாள் இரவில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக உலகின் முதல் பணக்காரர் ஆனார். ஆனால், அதன்பிறகு அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபெசோஸ் மற்றும் ரெனால்ட் நிறுவனர் பெர்னர்ட் ரெனால்ட் ஆகியோரிடம் முதலிடத்தைப் பறிகொடுத்தார். இருப்பினும், மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க், கடந்த 300 நாள்களாக முதலிடத்தை தன்வசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில்தான், புதன்கிழமை காலையில் ஆரக்கிள் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் (81) முதலிடத்தைப் பிடித்தார்.

ஆரக்கிள் நிறுவனத்தில் 41 சதவிகித பங்குகளை லேரி வைத்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் திடீரென அதிகளவில் உயர்ந்ததால், அவரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 101 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தமாக 393 பில்லியன் டாலர் (ரூ. 34.7 லட்சம் கோடி) உயர்ந்தது.

அதுமட்டுமின்றி, சமீபமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் குறைந்து வரும்நிலையில், அவர் 384 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, மூன்றாம் இடத்தில் மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கும், நான்காம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபெசோஸும் உள்ளனர்.

Summary

Larry Ellison is the world’s richest man after $101 billion surge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com