கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி கூறியுள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவின் மீது, பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸின் தலைவர்களைக் குறிவைத்து, கடந்த செப்.9 ஆம் தேதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அத்துமீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு பேசிய கத்தார் பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதல் வளைகுடா நாடுகளிடையே மிகுந்த கோவத்தைத் தூண்டியுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“தாக்குதல் நடைபெற்ற அன்று காலை நான் பிணைக் கைதி ஒருவரது குடும்பத்தினருடன் பேசினேன். அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கவனிக்கின்றனர். ஆனால், நேற்று நடைபெற்ற தாக்குதலின் மூலம் நெதன்யாகு அந்த பிணைக் கைதிகளுக்கான அனைத்து நம்பிக்கையையும் கொன்றுவிட்டார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கத்தாரின் தோஹா நகரத்தின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களின் மூலம் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Qatar's Prime Minister Sheikh Mohammed bin Abdulrahman al-Thani has said that Israeli Prime Minister Benjamin Netanyahu has killed the hope of hostages held by Hamas with an attack on the capital.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்குமா?

போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!

டிரம்ப் பேச்சு நடத்திய மறுநாளே தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்!







