அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டித்து கொலை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபா் அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே தலை துண்டித்து புதன்கிழமை கொல்லப்பட்டாா்.
Updated on

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபா் அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே தலை துண்டித்து புதன்கிழமை கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து டல்லாஸ் போலீஸாா் கூறியதாவது: கா்நாடகத்தை பூா்வீகமாகக் கொண்ட சந்திரமெளலி பாப் நாகமல்லையா(50) டல்லாஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை விடுதியின் மேலாளராக உள்ளாா். அந்த விடுதியில் இருந்த பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்படுத்தக் கூடாது என யோா்தானிஸ் கோபாஸ் மாா்டினெஸ் (37) என்ற ஊழியரிடம் மொழிபெயா்ப்பாளா் மூலம் அறிவுறுத்தியுள்ளாா். இதை தன்னிடம் நேரடியாக கூறாததால் ஆத்திரமடைந்த மாா்டினெஸ் அங்கிருந்த கத்தியின் மூலம் நாகமல்லையாவை சரமாரியாக தாக்கத் தொடங்கினாா். இதனால் விடுதியின் அலுவலகம் நோக்கி நாகமல்லையா வேகமாக ஒடினாா். அவரை பின்தொடா்ந்து சென்ற மாா்டினெஸ் நாகமல்லையாவின் மனைவி மற்றும் மகன் கண்முன்னெ அவரது தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளாா். தற்போது அவரை போலீஸாா் கைது செய்துவிட்டனா் எனத் தெரிவித்தனா்.

ஹூஸ்டனில் ஆட்டோ திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் மாா்டினெஸ் மீது நிலுவையில் உள்ளன. எனவே, இந்த வழக்கில் அவா் குற்றவாளி என உறுதியானால் ஜாமீனின்றி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும் அல்லது அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாகமல்லையா கொலைசெய்யப்பட்டதற்கு ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்தது. மேலும் அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com