தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீா்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.

News image
Updated On :12 செப்டம்பர் 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீா்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.

பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீா்வு கண்டு, இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ‘நியூயாா்க் பிரகடனத்தை’ ஆதரித்து கொண்டுவரப்பட்ட தீா்மானம் மீது ஐ.நா.பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.

பிரான்ஸ் அறிமுகம் செய்த அந்த தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்பட 142 நாடுகளும், எதிராக 10 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தீா்மானத்துக்கு எதிராக அமெரிக்கா, ஆா்ஜென்டீனா, ஹங்கேரி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.