இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

உலகில் பல போர்களை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேசியது பற்றி...
trump
டிரம்ப் AP
Published on
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தியிருப்பதாகவும் ஆனால் ரஷியா - உக்ரைன் இடையேயான போரை மட்டும் இதுவரை தீர்க்க முடியவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகப் பேச்சுவார்த்தையின் மூலமாக நிறுத்தியதாக அமெரிக்க அதிபர்டீ டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியாவில் எதிர்க்கட்சிகளும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் டிரம்ப் இதுபற்றி மீண்டும் பேசியுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் டிரம்ப் பேசுகையில்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்துவது எளிதானது என்று நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. போரை நிறுத்த இரண்டு வழிகள் இருந்தன. புதின் அதனைச் செய்ய முயன்றபோது ஸெலன்ஸ்கி அதைச் செய்யவில்லை. அடுத்து ஸெலன்ஸ்கி செய்ய விரும்புகையில் புதின் செய்ய விரும்பவில்லை. போரை நிறுத்த நாம் மிகவும் வலுவாக கீழே இறங்கிவர வேண்டும்.

புதினுடன் எனக்கு நல்ல நட்புறவு இருந்தது. இந்த ஒரு போரை மட்டும் என்னால் நிறுத்த முடியவில்லை. ஆனால் இந்த போரை நிறுத்த தீவிரமாக இறங்க முடிவு செய்திருக்கிறேன்.

நான் இதுவரை 7 போர்களை நிறுத்தியிருக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல போர்களை நிறுத்தியிருக்கிறேன். சில போர்கள் தீர்க்க முடியாதவையாக இருந்தன. ஆனால், அதனை நான் நிறுத்தினேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். தீர்க்க முடியாத போரை எல்லாம் நிறுத்தினேன். ஆனால் உக்ரைன் - ரஷியா போரை மட்டும் இதுவரை நிறுத்த முடியவில்லை.

பல நாடுகளின் வரி விதிப்புகளின் மூலமாக நாங்கள் போரை நிறுத்தியிருக்கிறோம். எங்களைப் பயன்படுத்திக் கொண்ட பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வரி விதிப்பு எங்களுக்கு ஒரு பெரிய ஆயுதமாக இருந்தது. அதுமட்டுமன்றி நாட்டிற்க்கு கோடிக்கணக்கான வருவாயை கொண்டுவந்தது. வரி விதிப்பு தொடர்பாக எங்கள் மீதான ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது எங்களை ஒரு பணக்கார நாடாக மாற்றியுள்ளது" என்று பேசியுள்ளார்.

Summary

US president Trump says that he stopped so many wars including Pakistan and India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com