ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்! - டிரம்ப்

ரஷிய-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Updated On :14 செப்டம்பர் 2025, 12:25 am IST

‘ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை ‘நேட்டோ’ நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷிய-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் சில நாடுகள் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது அதிா்ச்சியளிக்கிறது. போரை நிறுத்த ரஷியாவிடம் மேற்கொள்ளும் பேச்சுவாா்த்தையை இது பலவீனமடையச் செய்கிறது.

சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக நோட்டோ உறுப்பு நாடான துருக்கி உள்ளது. ஹங்கேரி, ஸ்லோவாகியா போன்ற பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கி வருகின்றன.

ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டுமெனில், அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதோடு, ரஷியாவிடமிருந்து தொடா்ந்து எண்ணெய் வாங்கிவரும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை விதிக்க வேண்டும்.

ரஷியா மீது வலுவான கட்டுப்பாட்டையும் பிடியையும் சீனா கொண்டுள்ளது. எனவே, அதிக வரியை விதிப்பதன் மூலம் அந்தப் பிடியை உடைக்க முடியும் என்று குறிப்பிட்டாா்.