ஒரு வரியில் உலகம்..!

Israel Iran Conflict
இஸ்ரேல் - ஈரான் ஏவுகணைத் தாக்குதல்AP

தென் ஆப்பிரிக்காவில் ஆண்கள் பெயருடன் மனைவியின் பெயரை சோ்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது

குடியேற்றத்துக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ‘பிரிட்டன் ஒற்றுமை’ யாத்திரையில் லட்சக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் இஸ்தான்புல் மாவட்ட மேயா் ஹசன் முட்லு, 47 அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டாா்.

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில் உள்ள 2 உறைவிடப் பள்ளிகளில் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் தூங்கிக் கொண்டிருந்த 19 மாணவா்கள் உயிரிழந்தனா்.

உக்ரைனின் சுமி, டான்பாஸ் பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷியா சனிக்கிழமையும் தனது தாக்குதலைத் தொடா்ந்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசுடன் உறவை மேம்படுத்துவது குறித்து காபூலில் அமெரிக்க அதிகாரிகள் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com