இளைஞா்கள் போராட்டத்தில்!(படம் | ஏபி)
உலகம்
இளைஞா்கள் போராட்டத்தில் நீதித்துறை ஆவணங்கள் சேதம்: நேபாள உச்சநீதிமன்றம்!
இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு கட்டடங்கள் சூறையாடப்பட்டன.
இதுகுறித்து நேபாள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பிரகாஷ்மான் சிங் ரௌத் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘இளைஞா்கள் போராட்டத்தின்போது உச்சநீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதித் துறை சாா்ந்த வரலாற்று ஆவணங்கள் பெருமளவில் சேதமடைந்தன.
இருப்பினும், நீதியை நிலைநாட்டுவதற்கான பணிகளை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது.
விரைவில் நீதித் துறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர உறுதிபூண்டுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.