இஸ்ரேலைக் கண்டித்து கத்தாரில் அரபு - இஸ்லாமிய தலைவர்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!

அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்கள் ஆலோசனை...
தோஹா
தோஹாAP
Published on
Updated on
1 min read

கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து தோஹாவுக்கு தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. தோஹாவில் ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை ஈட்டித் தந்துள்ளது.

இதனைக் கண்டித்து, தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு கத்தார் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, திங்கள்கிழமை(செப். 15) நடைபெற உள்ள ஆலோசனையில் பங்கேற்க மத்திய கிழக்காசிய தலைவர்கள் பலர் தோஹாவுக்கு வருகை தந்துள்ளனர்.

அப்போது இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களை ஓரணியில் திரட்டும் இந்த ஆலோசனைக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமை வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு எதிராக தூதரக ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக கடும் நடவடிக்கைகள் பாயுமா என்பதைக் குறித்து வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Arab-Islamic summit convenes in Qatar following Israeli attack on Doha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com