காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது குறித்து...
காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.AP
Published on
Updated on
1 min read

இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா நகரம் எரிகின்றது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகின்றது. இதனால், அங்கு வசிக்கும் பாலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று (செப்.15) நள்ளிரவு முதல் தொடர் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களினால், ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், காஸா பகுதி பற்றி எரிகின்றது என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இஸ்ரேலில் இருந்து கத்தாருக்கு செல்லும் முன்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அரசின் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், காஸா மீதான நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கிவிட்டது எனவும், அதனால் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள சில நாள்கள் மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

Summary

Defense Minister Israel Katz has said that Gaza City is burning due to Israeli attacks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com