காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு! மக்கள் வெளியேற உத்தரவு!

காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது குறித்து...
காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்கள்...
காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்கள்...ஏபி
Published on
Updated on
1 min read

காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

காஸா நகரத்தின் மீது, நேற்று (செப்.15) நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 20-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகளை அழிப்பதற்காக, காஸா மீதான ராணுவ நடவடிக்கைகள் இன்று (செப்.16) அதிகரிக்கப்படுவதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேலின் செய்தித்தொடர்பாளர் அவிசாய் அட்ரீ கூறுகையில், இன்று காலை முதல் காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, காஸா மீதான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டுமெனவும், கடந்த ஒரு மாதமாகவே இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்து வந்தது.

ஆனால், காஸாவின் தெற்கு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை அதிகரித்துள்ளதால், வடக்கு காஸா மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: கிர்க் கொலைக்காகக் கொண்டாட்டமா? வெளியேறத் தயாராக இருங்கள்! வெளிநாட்டினருக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Summary

As the Israeli military's operations in Gaza are being expanded, Palestinians living there have been ordered to leave immediately.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com