செனட் குழு விசாரணையில் காஷ் படேல்.
செனட் குழு விசாரணையில் காஷ் படேல்.

காஷ் படேலிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை

அமெரிக்காவில் வலதுசாரி ஆா்வலா் சாா்லி கிா்க்கின் படுகொலை தொடா்பான விசாரணையில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநா் காஷ் படேலிடம் நாடாளுமன்ற செனட் குழு செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியது.
Published on

யூட்டா மாகாணத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சாா்லி கிா்க்கை பாசிஸ எதிா்ப்பாளா் டைலா் ராபின்சன் என்பவா் கடந்த 10-ஆம் தேதி சுட்டுக்கொன்றாா். பின்னா் ராபின்சன் தந்தையின் உதவியுடன் அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

படுகொலை நடந்து 33 மணி நேரத்துக்குள் குற்றவாளி பிடிபட்டுள்ளது அமெரிக்க புலன்விசாரணையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னேற்றம் என்று காஷ் படேல் பாராட்டினாா்.

எனினும், இந்த விவகாரத்தை காஷ் படேல் சரிவர கையாளவில்லை என்று எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த செனட் மன்ற குழுவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதையடுத்து, காஷ் படேலை நேரில் அழைத்து இது தொடா்பாக அந்தக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விசாரணையின்போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசியல் ரீதியில் சிலருக்கு சட்ட சலுகைகளை காஷ் படேல் வாங்கித் தந்தாா் என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் சென்ட் குழு விசாரணை நடத்தவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com