காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்பட இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகள் இந்த கொடூரச் செயல்களை தூண்டிவிட்டுள்ளனர்..?
காஸா சிட்டியில் ராணுவ ஆக்கிரமிப்பை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து குடும்பம் குடும்பமாக தெற்கு காஸாவுக்கு இடம்பெயரும் மக்கள்
காஸா சிட்டியில் ராணுவ ஆக்கிரமிப்பை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து குடும்பம் குடும்பமாக தெற்கு காஸாவுக்கு இடம்பெயரும் மக்கள் AP
Published on
Updated on
1 min read

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெனீவாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாலஸ்தீன மக்களும் அதேபோல, இஸ்ரேல் மக்களும் அமைதிக்காக கூக்குரலிடுகின்றனர். ஒவ்வொருவரும், இதற்கொரு முடிவு எட்ட விரும்புகின்றனர்.

ஆனால், நம் கண் முன் நாம் காண்பதெல்லாம், சண்டை மேலும் தீவிரமடைவதையே பார்க்கிறோம். இது முற்றிலும் ஏற்றுக்கொளவே இயலாதவொன்றாகும்.

காஸாவில், இதேபாணியில் திரும்பவும் தாக்குதல் நடத்தப்பட்டால், அப்போது பெண்களும் ஊட்டச்சத்து கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளும் மாற்றுத்திறனாளி மக்களும் என்ன செய்வார்களோ என்பதை வேதனையுடன் நினைத்துப் பார்க்கிறேன். இதற்கான ஒரே பதிலடி - கொடூர அழிவு நடவடிக்கையை நிறுத்துவதுதான்!”

இதனிடையே, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்பான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் விசாரணை செவ்வாய்க்கிழமை(செப். 16) முடிவடைந்தது.

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்திருப்பதாக எழுந்துள்ள முக்கிய குற்றச்சாட்டை மையப்படுத்தியே இந்த விசாரணை நடந்தது. அதிலும் குறிப்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்பட இஸ்ரேலின் முக்கிய உயர்நிலை அதிகாரிகள் இந்த கொடூரச் செயல்களை தூண்டிவிட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளெல்லாம் அதிர்ச்சியளிப்பதாக இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், வோல்கர் டர்க்கிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டதும் அவர் அளித்த பதிலில், “காஸாவில் மனிதநேயத்துக்கு எதிராக போர்க் குற்றங்கள் தீவிரமாக அரங்கேறுவதை நாம் பார்க்கிறோம். இந்த நிலையில், அங்கு நடத்தப்படுவது இனப்படுகொலையா என்பதை சாட்சியங்களின் அடிப்படையில் தீர்மானிகும் முடிவு சர்வதேச நீதிமன்றத்திடமே உள்ளது” என்றார்.

Summary

UN rights chief tells Israel to 'stop the carnage'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com