சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

பாகிஸ்தான் பிரதமர் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளது குறித்து..
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் எக்ஸ் - Shehbaz Sharif
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவுதி அரேபியா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அந்நாட்டுக்குச் சென்றுள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தில், இளவரசர் முஹம்மதுடன் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப், தகவல் அமைச்சர் அட்டாடுல்லா தரார், சுற்றுச்சூழல் அமைச்சர் முஸாதிக் மாலிக் மற்றும் சிறப்பு உதவியாளர் தாரிக் ஃபதேமி ஆகியோர் சவுதி அரேபியா சென்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்குள், 3 வது முறையாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேலினால் தாக்கப்பட்ட கத்தாருக்கு ஆதரவாக கடந்த செப்.11 மற்றும் செப்.15 ஆகிய இருநாள்களும், தலைநகர் தோஹாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

Summary

Pakistani Prime Minister Shahbaz Sharif is on an official visit to Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com