எச்-1பி விசா கட்டண உயர்வு: பெரு நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

எச்-1பி விசா கட்டண உயர்வு வெளியான நிலையில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நிறுவனங்கள்!
India Suspends Postal Services To US After Trumps Tariffs
அமெரிக்க அதிபர் டிரம்ப்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பி வருகின்றன.

அமெரிக்க குடியுரிமை பெறாத ஊழியர்களின் நுழைவு விசா மீதான கட்டுப்பாடு என்ற புதிய அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த அறிக்கையின்படி, எச்-1பி விசா திட்டம், தற்காலிகமாக, பெரு நிறுவனங்கள், ஊழியர்களை அமெரிக்காவிற்குள் மிகத் திறமையான அதிதிறன்பெற்ற செயல்பாடுகளைச் செய்வதற்காக கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் குறைந்த ஊதியம், குறைந்த திறமையான ஊழியர்களே போதும் என்ற இடங்களையும் இவர்கள் நிரப்பியதால், அமெரிக்க தொழிலாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கைத் தகவலை அனுப்பியிருக்கிறது.

அதன்படி, மைக்ரோசாஃப்ட், அமேஸான் உள்ளிட்ட நிறுவனங்கள், எச்-1பி மற்றும் எச்-4 விசா பெற்று தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

நீங்கள் எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் இருப்பவராக இருந்தால், நாட்டுக்குள்ளேயே இருங்கள் என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதகாவும் கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க வணிகத்துறை செயலாளர் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு, அந்த ஊழியர் மிகவும் தேவையானவரா? அல்லது அவரை வெளியேற்றப் போகிறீர்களா? இல்லை, அமெரிக்கர் ஒருவரை பணியமர்த்தப் போகிறீர்களா? என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

எச்-1பி விசா என்றால் என்ன?

எச்-1பி விசா என்பது ஒரு குடியுரிமை வழங்கப்படாத விசா முறையாகும். இது அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை மிகவும் சிறப்பு வாய்ந்த பணிகளில் பணியமர்த்த அனுமதிக்கிறது - மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவு மற்றும் குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் தேவைப்படும் பதவிகளுக்கு இது பொருந்தும்.

அமெரிக்காவில், இந்த விசா முறை தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் பொறியியல் போன்ற தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Companies warn employees after H-1B visa fee hike announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com