அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக்கொலை; இளைஞர் கைது

அமெரிக்காவில் இந்தியப் பெண்ணை சுட்டுக் கொன்ற 21 இளைஞர் கைது
பிரதிப் படம்
பிரதிப் படம்
Updated on
1 min read

அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக் கொன்ற கொள்ளையரை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது.

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், பெட்ரோல் பங்கை குஜராத்தைச் சேர்ந்த கிரண் படேல் (49) நிர்வகித்து வந்தார். இந்த நிலையில், செப். 16-ல் பெட்ரோல் பங்கில் நுழைந்த ஜேடன் மேக் ஹில் (21) என்பவர், கிரணிடம் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனிடையே, கிரண் படேலை ஜேடன் துப்பாக்கியால் சுட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜேடன் மீது ஒரு பாட்டிலை எறிந்துவிட்டு, கிரண் தப்பியோடினார். இருப்பினும், துப்பாக்கிச் சூடு காயத்தால் 20 அடி தொலைவிலேயே கீழே விழுந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய ஜேடன், மீண்டும் வந்து மயக்கநிலையில் இருந்த கிரணை இரண்டாவது முறை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்தபோதிலும் கிரண் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஜேடனை அடையாளம் கண்ட காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தெற்கு சர்ச் தெருவில் ஜேடனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

Summary

Gujarati woman shot dead in South Carolina

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com