இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி ரோஷ் ஹாஷனா வாழ்த்து!
யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்AP
Published on
Updated on
1 min read

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (செப். 22) சூரியன் மறைவுக்குப் பின் தொடங்கும் ரோஷ் ஹாஷனா(யூதர்களின் புத்தாண்டு) கொண்டாட்டம் அடுத்த இரு நாள்களுக்கு யூதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எமது நண்பர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் உலகெங்கிலுமுள்ள யூத சமூகத்துக்கும் ரோஷ் ஹாஷனா வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தாண்டில் ஒவ்வொருவருக்கும் அமைதி, நம்பிக்கை மற்றும் நல்ல ஆரோக்கியம் நிரம்பியிருக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

Summary

modi greetings to the people of Israel and the Jewish community worldwide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com