ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

ரஷியாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400-களை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும்

News image

எஸ்-400 வான்பாதுகாப்பு

Updated On :23 செப்டம்பர் 2025, 2:27 am

தினமணி செய்திச் சேவை

மாஸ்கோ: ரஷியாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400-களை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ரஷியாவின் எஸ்-400-களை வாங்க கடந்த 2018, அக்டோபா் 5-இல் மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ சண்டையில் இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ்-400 சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்களை ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும். இதுவரை நான்கு சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன’ என பாதுகாப்புத் துறை வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷியாவிடம் எஸ்-400 வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த 2021, மாா்ச் மாதம் எச்சரித்திருந்தது. இதைப் பொருப்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடம் எஸ்-400-ஐ வாங்கியது.

எனினும், அடுத்த ஆண்டு ரஷியாவுடனான ஒப்பந்தம் முழுவதும் நிறைவடையும் பட்சத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதிக்க நேரிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மாஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற ரஷியா சுதந்திர தின விழாவில் பிரதமா் மோடியின் சாா்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனம் சிறப்பாக செயல்பட்டது. அதிநவீன எஸ்-500ஐ வாங்கவும் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது’ என்றாா்.