
கனடாவில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகளின் கீழ், காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த இந்தர்ஜீத் சிங் கோசலை (வயது 36), கனடா காவல் துறையினர் கடந்த செப். 19 ஆம் தேதி கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கோசலுடன் குற்றம்சாட்டப்பட்ட டொரண்டோ நகரத்தைச் சேர்ந்த அர்மான் சிங் (23) மற்றும் ஜக்தீப் சிங் (41) ஆகியோரும் ஒஷாவா நீதிமன்றத்தில், இன்று (செப். 22) ஆஜர்படுத்தப்பட்டனர்.
காலிஸ்தான் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, பதவியேற்ற கோசல், காலிஸ்தானுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு பிரசாரம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தர்ஜீத் சிங் கோசல் “சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்” எனும் பிரிவிணைவாத அமைப்பிலும் உறுப்பினராகச் செயல்பட்டு வருகின்றார்.
இத்துடன், அவர் செயல்பட்ட சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் தலைவர் குர்பட்வாந்த் சிங் பன்னூன், இந்திய அரசினால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.