நியூயார்க் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டதும் 
டிரம்ப்பை தொலைபேசியில் அழைத்து தெரிவித்த 
பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.
நியூயார்க் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டதும் டிரம்ப்பை தொலைபேசியில் அழைத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.

பிரான்ஸ் அதிபரை தடுத்து நிறுத்திய அமெரிக்க காவல் துறை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பயணம் காரணமாக, அந்நாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
Published on

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பயணம் காரணமாக, அந்நாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் பங்கேற்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை மாலை சென்றாா். அப்போது அந்த நகரில் டிரம்ப் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் சென்றதால், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் ஐ.நா. விவாதத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வாகனத்தில் இருந்து வெளியேறிய மேக்ரான், சாலையோரத்தில் காத்திருந்தாா். அவரை அவ்வாறு காக்க வைத்ததற்காக அருகில் இருந்த காவல் துறை அதிகாரி மன்னிப்பு கோரினாா். இந்தக் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகத்தில் வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நியூயாா்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு அமெரிக்க அதிபா் செல்லும்போதெல்லாம், அந்தத் தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவது வழக்கம். இதுதான் திங்கள்கிழமை நடைபெற்றது. அதேவேளையில், தனது வாகனம் நிறுத்தப்பட்டது தொடா்பாக டிரம்ப்பை கைப்பேசியில் தொடா்புகொண்டு மேக்ரான் சிரித்தபடியே கூறினாா். அவா்களின் பேச்சு நட்பாா்ந்த முறையில் இருந்தது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com