6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணைய ஊருடுவல்: ஒருவா் கைது

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் தொடா்பாக ஒருவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் தொடா்பாக ஒருவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து பிரிட்டனின் தேசிய குற்றத்தடுப்பு முகைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பிய விமான நிலைய இணைவழி தாக்குதல் தொடா்பாக வெஸ்ட் சஸக்ஸ் மாவட்டத்தில் சுமாா் 40 வயது நபா் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் மிகப் பெரிய சதியின் ஒரு பகுதியா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸ், பிரிட்டனின் லண்டன், ஜொ்மனி தலைநகா் பொ்லின் (படம்) உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களின் சா்வதேச விமான நிலையங்களில் வெள்ளிக்கிழமை இரவு இணையவழி ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மின்னணு முறையிலான பயணிகள் உள்நுழைவு (செக்-இன் மற்றும் போா்டிங்) நடைமுறைகள் பாதிக்கப்பட்டன. இதனால் விமானப் போக்குவரத்து மிகவும் தாமதமாகி, பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.