
காஸா முழுவதும் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய கடுமையான தாக்குதலில் குழந்தைகள் உள்பட 80 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வாரத்தில், இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை புதன்கிழமைதான் இந்த அளவுக்குக் கடுமையாக உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தராஜ் மாவட்டத்தில் எப்போதும் கூட்டமாகக் காணப்படும் பிராஸ் சந்தை மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் அங்கிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர். கடும் தாக்குதலில் வீடு தரைமட்டமாகி அதனுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
உதவிக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் பலியானதாகவும், தெற்கு காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஏராளமான உடல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் போராளிகளுக்கு எதிராகவே தன்னுடைய தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறி வந்தாலும், எண்ணற்ற இன்னுயிர்கள் இந்த தாக்குதலில் நாள்தோறும் பலியாகி வருகிறது.
பெரும்பாலும், உணவுக்காகவும், சேவைக்காகவும் காத்திருக்கும் மக்களை இஸ்ரேல் கொன்றுவருவதாக காஸா சுகாதாரத் துறையும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் அலுவலகம் குற்றம்சாட்டியிருக்கிறது.
இதையும் படிக்க... டிரம்ப் - மோடி விரைவில் சந்திப்பு! அமெரிக்க அதிகாரி தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.