நேபாளத்தில் வன்முறைக்குப் பிறகு முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
நேபாள ஊழல் ஆட்சிக்கு எதிராகவும் சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராகவும் நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கே.பி. சர்மா ஓலி முதலில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெளியே வராத அவர், இன்று அவரது கட்சி விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)யின் மாணவர் பிரிவான ராஷ்ட்ரிய யுவ சங்கம், பக்தபூரில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஓலி கலந்துகொண்டுள்ளார்.
அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் அதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி செப். 12ல் பதவியேற்றுக் கொண்டாா்.
நேபாள உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்புக்குரிய சுசீலா காா்கி (73) இப்போது நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமா் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.