உலகம்
கரூா் நெரிசல் பலி சம்பவம்: இலங்கை அரசு இரங்கல்!
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் பிரதீப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: கரூரில் அரசியல் கட்சி ஒன்றின் பரப்புரை கூட்டத்தின்போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக, அவா் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு சாா்பில் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்கள், விரைந்து குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் பிராா்த்திக்கிறோம். உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்ப உறவுகளின் துயரிலும், துன்பத்திலும் இலங்கை மக்கள் அனைவரும் பங்கு கொள்கிறோம் என்றாா்.