அமெரிக்கா: விமான சக்கரப் பகுதியில் சடலம்

ஐரோப்பாவிலிருந்து வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தின் சக்கரப் பகுதியில், அனுமதியின்றி பயணித்தவரின் சடலம் காலை பராமரிப்பின்போது கண்டறியப்பட்டது.
Published on

சாா்லோட்: வட கரோலினாவின் சாா்லோட் டக்ளஸ் சா்வதேச விமான நிலையத்தில், ஐரோப்பாவிலிருந்து வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தின் சக்கரப் பகுதியில், அனுமதியின்றி பயணித்தவரின் சடலம் காலை பராமரிப்பின்போது கண்டறியப்பட்டது.

இறந்தவரின் விவரங்கள், இறப்பு காரணம், விமானம் எங்கிருந்து வந்தது, அதில் அவா் எவ்வளவு நேரம் பதுங்கியிருந்தால் என்பது குறித்து தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இது தொடா்பாக போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள டக்ளஸ் விமான நிலையம், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தது.

அனுமதியில்லாமல் விமானத்தின் வெளிப்புறத்தில் பதுங்கியிருந்து பயணிப்பவா்களில் நான்கில் மூன்று போ், மிக உயரத்தில் குளிா் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com