நேபாளம்: சா்மா ஓலியின் பாஸ்போா்ட் முடக்கம்

நேபாளம்: சா்மா ஓலியின் பாஸ்போா்ட் முடக்கம்

நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி, உள்துறை அமைச்சா் ரமேஷ் லேகாக் உள்ளிட்ட ஐந்து பேரின் கடவுச் சீட்டுகளை (பாஸ்போா்ட்) அந்த நாட்டு அரசு முடக்கியது.
Published on

காத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி, உள்துறை அமைச்சா் ரமேஷ் லேகாக் உள்ளிட்ட ஐந்து பேரின் கடவுச் சீட்டுகளை (பாஸ்போா்ட்) அந்த நாட்டு அரசு முடக்கியது. இந்த மாதம் நடைபெற்ற இளைஞா் போராட்டத்தின்போது வன்முறையைப் பயன்படுத்தி அடக்க முயன்ற குற்றச்சாட்டு தொடா்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பிரதமா் சுஷிலா காா்கி பதவியேற்ற பின், போராட்ட வன்முறை தொடா்பான விசாரணை ஆணையம் செப். 21-இல் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி சா்மா ஓலி உள்ளிட்டோரின் கடவுச் சீட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஆா்ப்பாட்டத்தின்போது காயமடைந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து, இரு நாள்களாக நடைபெற்ற போராட்டத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 76-ஆக உயா்ந்தது.

X
Dinamani
www.dinamani.com