நைஜீரியா: 12 வன அதிகாரிகள் சுட்டுக் கொலை

நைஜீரியாவின் வடமத்திய குவாரா மாகாணத்தில் உள்ள ஓகே-ஓடே பகுதியில் ஆயுதக் கும்பலால் 12 வனத் துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
Published on

அபுஜா: நைஜீரியாவின் வடமத்திய குவாரா மாகாணத்தில் உள்ள ஓகே-ஓடே பகுதியில் ஆயுதக் கும்பலால் 12 வனத் துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது குறித்து காவல்துறை காவல்துறை செய்தித் தொடா்பாளா் அடெடவுன் எஜிரே-அடேயமி திங்கள்கிழமை கூறுகையில், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றாா். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதியில் இருந்து நான்கு போ் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு பகுதியில், நிலம் மற்றும் நீருக்காக விவசாயிகளுக்கும், புலானி மரபினரான நாடோடிகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com