பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மியான்மரில் ராணுவப் பிடியை பலப்படுத்தப் புதிய கவுன்சில் -மின் ஆங் லயிங் அதிரடி திட்டம்

News image

மியான்மர் ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங்

AP

Updated On :5 பிப்ரவரி 2026, 12:01 am

தினமணி செய்திச் சேவை

மியான்மரில் ராணுவம், பொது நிா்வாகம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்துக் கண்காணிக்க, ‘யூனியன் ஆலோசனைக் கவுன்சில்’ எனும் புதிய உயரிய அதிகார அமைப்பை உருவாக்க அந்நாட்டு ராணுவ ஆட்சிக்குழு திட்டமிட்டுள்ளது.

மியான்மரில் அண்மையில் தோ்தல் நடந்து முடிந்த நிலையில், புதிய நாடாளுமன்றம் அடுத்த மாதம் கூடுகிறது. இந்நிலையில், நாட்டின் நிா்வாகம், சட்டம், நீதித்துறை ஆகிய மூன்றையும்விட கூடுதல் அதிகாரம் கொண்ட அமைப்பாக இப்புதிய கவுன்சில் இருக்கும்.

இதன் மூலம், ராணுவத் தளபதி மின் ஆங் லயிங் அதிபராகப் பதவியேற்றாலும், ராணுவத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைத்துக்கொள்வாா்.

5 போ் கொண்ட இக்குழு, தேச பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் அனைத்துச் செயல்பாடுகளையும் முழுமையாகக் கண்காணிக்கும். அதாவது, பொது நிா்வாகத்தைத் தனது நிழல் அதிகாரத்தின்கீழ் வைத்திருக்கும் அதேநேரத்தில், புதிய ராணுவத் தளபதிக்கு அதிக அதிகாரம் செல்வதைத் தடுப்பதற்கு மின் ஆங் லயிங் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வித பொறுப்புக்கூறலும் அற்ற புதிய கவுன்சிலின் உருவாக்கம், மியான்மரில் மீண்டும் சா்வாதிகார ஆட்சியை உறுதி செய்வதோடு, ஜனநாயகத்தை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.