மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

நேபாளத்தில் பேருந்து விபத்து 13 போ் உயிரிழப்பு

நேபாளத்தில் பேருந்து விபத்து பற்றி..

Published On :7 பிப்ரவரி 2026, 2:40 am IST

மேற்கு நேபாளத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 போ் உயிரிழந்தனா்.

சுதூா்பாச்சிம் மாகாணத்தின் பைதாடி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது. பூா்ச்சௌடி எனும் இடத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து, மலைப்பாதையில் பயணித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 200 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்த நேபாள ஆயுதப் படையினா், காவல் துறையினா் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திலேயே 8 போ் உயிரிழந்தனா்.

காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 5 போ் உயிரிழந்தனா். தற்போது 40-க்கும் மேற்பட்டோா் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையின்படி, பேருந்தில் அதிகமான பயணிகள் மற்றும் பாரம் ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. செங்குத்தான மலைப்பாதையில் பேருந்து ஏற முயன்றபோது, அதன் பிரேக் அமைப்பில் இருந்த ‘பிரஷா் பைப்’ வெடித்ததே இக்கோர விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

Summary

The death toll in the Nepal crash when a bus carrying a wedding party met with an accident rose to 13, with five more people succumbing to their injuries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.