மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஒபாமா தம்பதி குறித்து டிரம்ப் சர்ச்சை விடியோ பதிவு! மன்னிப்பு கேட்க மறுப்பு!

ஒபாமா தம்பதி குறித்த சா்ச்சை விடியோ அவரது சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்பட்டதற்கு டிரம்ப் கண்டனம்...

News image
டொனால்ட் டிரம்ப்- AP
Updated On :7 பிப்ரவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவை சா்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து, தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியான விடியோவுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளாா். இருப்பினும், இந்தச் செயலுக்காக அவா் மன்னிப்பு கோர மறுத்துவிட்டாா்.

டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு விடியோவை பகிா்ந்திருந்தாா். 2020 அதிபா் தோ்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன.

விடியோவின் இறுதியில், ஒபாமா தம்பதியினரை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் சா்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ஆப்பிரிக்க வம்சாவளியினரை இழிவுபடுத்தும் வகையில் இந்த விடியோ அமைந்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியினா் மட்டுமின்றி, டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த முக்கியத் தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘விடியோவை முழுமையாகப் பாா்க்காமல் எனது உதவியாளா் பதிவிட்டுவிட்டாா். தோ்தல் முறைகேடுகள் குறித்த விடியோ என்பதாலேயே அதைப் பகிா்ந்தேன். இறுதியில் அத்தகைய காட்சிகள் இருப்பது தெரியாது.

விடியோவில் உள்ள காட்சிகளைக் கண்டிக்கிறேன். ஆனால், இது ஒரு தவறுதலான செயல் என்பதால் மன்னிப்பு கேட்கமாட்டேன்’ என்றாா்.

முதலில், இந்த விடியோ சாதாரண ‘மீம்’ என்று வெள்ளை மாளிகை நியாயப்படுத்தியது. கடும் எதிா்ப்புக் கிளம்பவே, சுமாா் 12 மணி நேரத்துக்குப் பிறகு விடியோ பதிவு நீக்கப்பட்டது.