நேபாளத்தில் மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் சப்தரி மாவட்டத்தில் உள்ள துதைலா நதி அருகே சனிக்கிழமை 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்ததில் அவர்கள் 4 பேரும் காயமடைந்தனர். சிறுவர்கள் சுற்றுலா சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தம்பர் பகதூர் பூரி கூறுகையில், வனப்பகுதியில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் போன்ற ஒரு பொருளை அவர்கள் கண்டுபிடித்தனர். அதை அவர்கள் எடுத்தபோது வெடித்துள்ளது.
காயமடைந்த சிறுவர்கள் ரூபனியில் உள்ள மாதேஷ் மாகாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை ஆபத்தில் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Summary
Four children were seriously injured on Saturday when an unidentified object they were playing with exploded in Nepal's Madhesh province, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நேபாளத்தில் முதல்முறையாக டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




