உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாகிஸ்தானில் எலான் மஸ்க்கின் நிறுவனத்தை அனுமதிப்பதில் தயக்கம் காட்டும் அரசு! என்ன காரணம்?

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவைக்கு பாகிஸ்தானில் அனுமதி மறுப்பு?

லான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவை நிறுவனம் - Center-Center-Delhi

Published On :

இஸ்லாமாபாத் : உலகின் முன்னணி கோடீஸ்வரர்களுள் ஒருவரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணையதள சேவை நிறுவனம், பாகிஸ்தானில் தமது சேவையை வழங்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், ஸ்டார்லிங்குக்கு ஒப்புதல் அளிக்க பாகிஸ்தான் அரசு தயக்கம் காட்டுவதாகத் தகவலறிந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் விண்வெளி செயல்பாடுகள் ஒழுங்குமுறை வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பாகிஸ்தானில் இணையதள சேவை வழங்க உரிமம் கோரி ஸ்டார்லிங்க் உள்பட மொத்தம் 5 நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் அந்நாட்டில் பல லட்சம் டாலர் முதலீடு செய்ய முடியுமென்பதால், உரிமம் பெறுவதில், ஸ்டார்லிங்க், சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் ஸ்பேஸ்காம் சேட்டிலைட் டெக்னாலஜி லிமிடெட் உள்பட 5 நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடான எலான் மஸ்க்கின் நட்புறவில் தேய்வைத் தொடர்ந்து, சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணச் சுழல் மற்றும் பாகிஸ்தானின் முக்கிய தரவுகள் வெளியே போகும் அபாயம் இருப்பதாகக் கருதி பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அவரது நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் இழுபறி நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Summary

The licence to Starlink to enter Pakistan's satellite internet market is delayed over data security concerns, the ongoing Musk-Trump fallout and competition from Chinese firms, local media reported on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.