பிரதமர் மோடி - செஷல்ஸ் அதிபர் சந்திப்பு: செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு அறிவிப்பு!

செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் பொருளாதார தொகுப்பு - மத்திய அரசு
பிரதமர் மோடியுடன் செஷல்ஸ் அதிபர் சந்திப்பு
பிரதமர் மோடியுடன் செஷல்ஸ் அதிபர் சந்திப்புPTI Photo
Updated on
1 min read

இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவையொட்டி அமைந்துள தீவு நாடான செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ சுற்றுப்பயணமாக 6 நாள்கள் வருகை தந்துள்ள செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பிரதமர் நரேந்திர மோடி பல்துறை சார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் தொடர்ச்சியாக, இருதரப்பும் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு துறைகளில் விரிவான ஒத்துழைப்பு நல்க சம்மதம் தெரிவித்துள்ளதை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், அந்நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு பொருளாதார தொகுப்பு நிதியாக 17.50 கோடி டாலர் தொகை அறிவிகப்பட்டுள்ளது.

Summary

India on Monday announced USD 175 million as development assistance to Seychelles after Prime Minister Narendra Modi held wide-ranging talks with the island nation's President Patrick Herminie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com